
தல அஜித்தின் அடுத்தபடம் இந்தி பிங்க்கின் ரீமேக்.
இந்த படத்தில் அமிதாப்பச்சன் வக்கீலாக வருவார்.
3 இளம் பெண்கள்,3 வாலிபர்கள் இவர்களைச் சுற்றி கதை அமைந்திருக்கும்.
அமிதாப் நடித்த ரோலில்தான் தல நடிக்கிறார். இந்தி படத்தை ராஜஸ்தான் போலீசாருக்கு பிரத்யேகமாக போட்டுக்காட்டினார்கள். ஜனாதிபதி மாளிகையிலும் தனியாக போட்டுக் காட்டினார்கள்.
பெண்களுக்கான உரிமை வழங்கப்படுகிறதா, தாமதமாக வீட்டுக்குத் திரும்பினாலே அவர்கள் மீது இந்த சமூகம் சந்தேகப்படுகிறது போன்ற விஷயங்களை அலசி இருப்பார்கள்.
அமிதாப்புக்கு பாராட்டுகளை அள்ளிக் கொடுத்த படம் இது. அவரைப் போல தல அஜித்துக்கும் தமிழ் ரீமேக் சிறப்புகளை வாரி வழங்கும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.












