மீ டூ களை கட்டியதே பாடகி சின்மயி யினால்தான்.! அதுவும் கவிஞர் வைரமுத்துவை இழுத்ததினால் ஒரே இரவில் பேமஸ் ஆகி விட்டார் சின்மயி.
சரி இந்த விளையாட்டு வழியாக ஒரு கலக்கு கலக்கி விடலாம் என்று கணக்குப் போட்டிருப்பார் போலிருக்கிறது.
அதற்கு வெடி வைத்தவர் இளையவேள் ராதாரவி. அப்பா எம்.ஆர்.ராதா எப்படியோ அவர் பிள்ளையும் அப்படியேதான்.துணிந்த ஆள். எதற்கு அசராத தேக்கங்கட்டை.!
இவரது தலைமையிலான டப்பிங் யூனியன் சின்மயியின் சீட்டைக் கிழித்தது. இரண்டு வருசமாக சந்தா கட்டவில்லையாம்.
உடனே சின்மயி “நான் வாழ்நாள் உறுப்பினராக்கும் பாங்க் வழியாக பணம் கட்டினேன்” என்று அதிரடியாக பதில் அளித்தார்.
இதெல்லாம் உண்மையா என்று ராதாரவியிடம் கேட்டால் மனிதர் கொதிக்கிறார்.
“சின்மயியை நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். வாழ்நாள் உறுப்பினராக பாங்க் மூலம் பணம் கட்டியதாக சின்மயி சொல்வது வைரமுத்து விஷயத்தில் சொன்ன பாஸ்போர்ட் கதை மாதிரிதான் இருக்கும். கவிஞரை மிரட்டி காசு பார்க்க நினைத்த கதை மாதிரி இங்க நடக்காது. வாழ்நாள் உறுப்பினர் என்று சொன்னால் அந்த உறுப்பினர் அட்டையைக் காட்டட்டும். யார் மீதெல்லாம் மீ டூ சொல்லி பணம் பெற நினைக்கிறாரோ சொல்லிக்கட்டும் அதற்கும் டப்பிங் யூனியனுக்கும் சம்பந்தம் இல்ல,”என்கிறார்.