
கையில சோடா பாட்டிலை கையில எடுக்காத குறைதான்.!
“ந்தா..நான் 2 1 ம் தேதி படத்த ரிலீஸ் பண்ணுவேன்.உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிப்பாரு” என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் மாரி 2 அதட்டலாக ஒரு டீசரை விட்டார்.
தயாரிப்பாளர் சங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்து அடித்தளத்தில் விரிசல்.!
ஆளாளுக்கு ஏறி அடிச்சா பாவம் விஷால் என்ன பண்ணுவார்?
சங்கத்துக்கென இருந்த மரியாதை அசிங்கமானது தனுஷினால்தான்!
ஜனவரியில் வரவேண்டிய மாரி 2 வை டிசம்பருக்கு கொண்டு வருவது விதி மீறல் என கண்டிக்க தலைமையினால் முடியவில்லை. ரெகுலேசன் கமிட்டி கஜா புயலில் சிக்கி உருமாறிப் போச்சு .
படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்கப்பா என சொல்லவே விஷ்ணுவிஷாலுக்கு அடி.
இவருடைய சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது சிக்கலாகி இருக்கிறது . புலம்பித் தள்ளிஇருக்கிறார்.
“கட்டுப்பாடுகள் இருக்கு. ஆனா இல்லை.இருக்கு.இல்லவே இல்லை. ரெகுலேஷன்படி நடந்தா இப்படித்தான் நடக்குமா?என்னுடைய படத்துக்கு இரண்டாவது தடவையாக நடந்திருக்கிற அநீதி. எதுக்காக விதிமுறைகள்னு வைக்கணும். சிஸ்டம் சரியில்ல.அரசியல் நடக்கிது” என்று கதறி இருக்கிறார்.












