
பிக்பாஸ் மருத்துவ முத்தம் செய்த வேலை இல்லாத காதலையும் இருப்பதாகக் காட்டியது. பிக்பாஸின் ரேட்டை உயர்த்துவதற்காக விஜய் டி.வி.கையாளுகிற தந்திரங்களில் இதுவும் ஒன்று. ஆரவ்- ஓவியா காதல் இருப்பதாக ஆர்மிகளை உருவாக்கி பில்டப் பண்ணினார்கள். அது ஆரவ்வின் திரைப்பட அறிமுகத்துக்கு இப்போது உதவும் என எதிர்பார்க்கிறார்கள். ஆரவ்வின் அறிமுகப்படமான ராஜபீமா படத்தில் ஓவியாவை ஒரு ஆட்டம் போட வைத்திருக்கிறார்கள். கும்கி படத்தின் விக்ரம் பிரபுவின் அறிமுக போஸ்டர்களில் யானையை பயன்படுத்தியதைப் போல் இந்த படத்தின் போஸ்டர்களிலும் யானை இருக்கிறது.ஏற்கனவே ஓவியாவை வைத்து எடுக்கப்பட்ட படம் இன்னும் ரிலீஸ் ஆகாமலேயே இருக்கிறது என்பதை நினைவில் கொள்க.












