அமெரிக்காவில் உலகநாயகன் கமலையும் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சந்தித்துப் பேச வைக்க ரகசிய ஏற்பாடு நடந்திருக்கிறது. இதை பிஜேபியின் முக்கிய தலை முன் நின்று செய்திருக்கிறது.
இந்த சந்திப்புக்கு கீசிங்கராக இருப்பது ஒரு மீடியா ஆள் என்கிறார்கள்.
வருகிற தேர்தலில் ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும் ,அது பிஜேபி.க்கு உதவிகரமாக இருக்கவேண்டும் என்பது முக்கிய அஜண்டா. அமெரிக்காவுக்கு ரஜினி குடும்பம் பறந்தபின்னர், கமலும் பறந்து சென்றிருக்கிறார்.
இந்தியன் 2 என காரணம் சொல்லப்பட்டாலும் அதை அந்த மீடியேட்டர் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவில் உள்ள ராஜகுரு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.