அடுத்த பிரதமர் வேட்பாளர் நிதின் கட்கரியா, மோடியா என பாஜகவுக்குள் நடக்கிற மோதலை விட தலயா தளபதியா என்று நடக்கும் சண்டைதான் சோசியல் மீடியாவில் பிரதான போர்க்களமாக இருக்கிறது. வட கொரியா -தென் கொரியா சண்டை கூட இம்புட்டு காரமாக இருந்ததில்லை சாரே!
இந்த வருட பொங்கல் ஸ்பெஷல் விஸ்வாசம்-பேட்ட சண்டைதான்.!
2 0 1 8 ம் வருசத்தில் தளபதி விஜய் பட வசூல்தான் டாப் ஒன் என்று அவர்கள் கணக்கு காட்டுகிறார்கள். “அதெல்லாம் போங்கு,எங்கள் சூப்பர் ஸ்டாரின் டு பாயிண்ட் ஓ தான் டாப்” என இவர்கள் எகிறுகிறார்கள்.
“ரஷ்யா மட்டுமில்ல உக்ரைன் நாட்டுலயும் தல கொடி பறக்கிது. இப்ப பாலிவுட்டில் விஸ்வாசம் 1 3 கோடி .தல படங்களிலேயே இதுதான் அதிகவிலை”என இவர்கள் சொல்கிறார்கள்.இவர்களின் சண்டை என்னிக்கி முடியுமோ தெரியல.
கூடுதல் செய்தி.போனி கபூர் தயாரிக்க இருக்கிற படத்தில் அமிதாப் வேடத்தில் அஜித்தும்,மற்றும் நஸ்ரியா,கல்யாணி ஆகியோருடன் விக்ரம் வேதா நாயகி ஷ்ரதாவும் நடிக்கலாம் என தெரிகிறது.