
வட்டச்செயலாளர் வண்டு முருகனை வைத்து வாழ்வே மாயம் மாதிரி படமா எடுக்க முடியும்?
இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ,காமடி டெர்ரர் யோகிபாபு இருவரையும் வைத்துக் கொண்டு அடல்ட் ஹாரர் காமடி எடுத்தால் கல்லாவை நிரப்பலாம் என்று கணக்குப் போட்டு இறங்கி இருக்கிறது நம்பர் ஒன் ப்ரொடக்ஷன்ஸ்.
பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
“இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். ( நம்பிட்டோம்.)
வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்” என்கிறார் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா.












