
இழந்த மார்க்கெட்டை பிடிக்கிற தந்திரமோ என்னமோ தெரியவில்லை.
வில்லங்கங்களுக்கு வரவேற்பு வளைவு வைக்கிற மாதிரியே படங்களை தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
எப்படியாவது லைம்லைட்டில் நிறுத்திவிடுகிறேன் என்று ஹன்சிகாவை இயக்குநர் ஜமீல் கேள்விக்குறிகளாக்கிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ ! ஹீரோவை காட்டவே இல்லை.. . மஹா படத்திற்கு ஹீரோவே கிடையாது போல.
ஹீரோக்களுக்கு ஆரத்தி எடுக்கிற நாட்டில ஹீரோயினுக்கு லட்சார்ச்சனை செய்கிறார்கள் சார்!
ஹன்சிகா வரலாற்றில் இப்படி சரவெடி விளம்பரங்களை எவரும் விட்டதேயில்லை.
.கஞ்சா அடிக்கிற மாதிரி ஒரு போஸ்டர் விட்டார்கள். சிலர் கோர்ட்டுக்குப் போனார்கள்.
அடுத்து பர்காவுக்குள் ஹன்சிகாவை மூடி ஒரு போஸ்டர் வந்தது.
தொடர்ச்சியாக ரத்த தடாகத்தில் தாமரை முளைப்பது மாதிரி ஹன்சிகாவை மிதக்கவிட்டு ஒரு போஸ்டர்.புத்தாண்டு நாள் ஸ்பெஷல் மாதிரி.!
அடுத்து என்னவோ!












