
புது வருஷம் பொறந்தாச்சு..யாருக்காவது கல்யாணம்னு மங்களகரமா ஒரு கிசு கிசு விட்டா என்ன குடியா முழுகிடப் போவுதுன்னு நினைத்தார்களோ என்னவோ கார பூமி பேனா மன்னர்கள்? தீட்டி விட்டார்கள்.!
ஆந்திராவை சேர்ந்த ஒரு இணைய தளம் ஸ்ருதிஹாசனுக்கு புது வருஷத்தில் கல்யாணம் என்பதாக நியூசை தட்டி விட்டது
” இப்ப ஸ்ருதிக்கு படம் இல்லை.டி.வி.யில் ஹோஸ்ட் பண்றாங்க.அதனால அவருடைய பாய் பிரண்டான மைக்கேலை புது வருஷத்தில் கல்யாணம் பண்ணிக்கப்போறார்”னு எழுதிட்டாங்க.
“அடடே…அப்படியா! இப்பத்தாங்க அந்த நியூசை கேள்விப்படுறேன்” என ஆச்சரியக்குறியை போட்டு விட்டார் கமலின் புத்திரி!












