ஷங்கரின் அடுத்த இலக்கு இந்தியன்.2. அரசியல் பேசுவதற்கு நிறைய இடம் இருந்தும் பேசப்போவதில்லை என சொல்லிவிட்டார் உலகநாயகன் கமல்.
ஆனால் ஷங்கரின் மூளை ஊழலுக்கு கடுமையான எதிரி என்பதால் நாட்டில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டாமல் இருக்காது என்று நம்பலாம்.
அதில் அடிபட்டு எத்தனை அரசியல் நரிகள் சாயுமோ தெரியாது.
கமலுக்கு இரட்டைக் குதிரை சவாரி. காஜல் அகர்வால் தவிர இன்னொருவர் தேர்வில் இருக்கிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் காஜல்.
கதையில் கமலின் பேரனுக்கு முக்கிய இடம் இருக்கிறதாம். ஷங்கரின் தேர்வு சிம்பு. பேரனாக நடிக்கிறார்.