மர்மத்தை ஆவி வந்து சொன்னால்தான் உண்மை தெரியும் என்கிற அளவுக்கு தண்டர் தைஸ் ஸ்ரீ தேவியின் மரணத்தை திரில்லராக வைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீ தேவியின் சகோதரி வாயைத் திறந்தால்தான் உண்மை தெரியும் என்று அப்போதே சந்தேகத்தை சிலர் கிளப்பினார்கள்.
வாயைத் திறப்பதற்கு முன்னர்அவரின் மனசாட்சி கீதையைத் தொட்டு விட்டு சொல்லுமா?
சரி சரி …முடிந்த கதை. அதை ஏன் புதைகுழியில் இருந்து எழுப்ப வேண்டும்?
இது வேற பிரச்னை!
ஸ்ரீ தேவி பங்களா என்கிற பெயரில் இந்தியில் படம் எடுத்திருக்கிறார்கள். அதன் இயக்குநர் பிரசாத் மம்புள்ளி.
கண்ணடித்த நடிகை பிரியாவாரியர்தான் முக்கிய வேடம். நடிகையாகவே நடித்திருக்கிறார்
.தம் அடிக்கிறார்,தண்ணி அடிக்கிறார் ,நீச்சல் உடையில் நடித்திருக்கிறார் .கடைசியில் பாத் டப்பில் மரணிக்கிறார்.
இப்படித்தான் முன்னோட்டத்தில் இருக்கிறது.
இந்த படத்தை திரையிடக்கூடாது என்று ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
ஆனால் இயக்குநர் பிரசாத் மம்புள்ளி அசருவதாக இல்லை.
“வக்கீல் நோட்டிஸா? விட்டுக்க! ஸ்ரீ தேவிங்கிறது காமன் நேம்.இந்த படம் திரில்லர் படம். நடிகையை பற்றிய படம்தான்! அந்த நோட்டிஸை எப்படி எதிர்கொள்றதுங்கிறது எனக்கு தெரியும் .கவலப்படல!” என்கிறார். முன்னோட்டம் தனியாக இருக்கிறது.பாருங்கள்.
செத்தும் சிக்கலில் மாட்டுவது சிலரது மரணத்துக்கு மட்டுமே உண்டு! ஜெ .நல்ல உதாரணம்!