ஷங்கரின் அடுத்த பிரமாண்டம் இந்தியன் 2 .
உலகநாயகன் கமல்ஹாசன் இன்னும் இரண்டு நாளில் நடிக்கவிருக்கிற படம். கமலுக்கு இணையாக காஜல் அகர்வால் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.இந்த படத்துக்காக அமெரிக்காவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார்
கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ படத்தில் லைகாவுக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் இந்த படத்தில் சிம்பு நடிப்பதை தயாரிப்பு விரும்பவில்லை என்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சிம்பு நடிக்கிறார் ,நடிக்கவில்லை என்கிற இந்த இரண்டு செய்திகளுமே அதிகாரப்பூர்வமாக வந்தது அல்ல.யூகத்தின் அடிப்படையில் வெளிவந்தவைதான்.
தற்போது பேரன் கேரக்டரில் சித்தார்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவும் யூகமே!
ஆனால் இது உறுதியான செய்தியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.