கொலகாண்டுல இருக்கார் போல பிரகாஷ்ராஜ்?
சும்மாவே கேள்வி எல்லாம் காரமா இருக்கும் ,பிரதமர்,முதல்வர் என்றெல்லாம் பார்ப்பதில்லை .சவுக்கடிதான்!
சுப்ரீம் லீடர் யார்னு தெரியல.அவர் கேரள அரசு பற்றி ஒரு கருத்து சொன்னாராம். அதாவது “கேரள அரசு நடத்திய ‘சபரிமலா’ சரித்திரத்திலேயே மிகவும் வெட்கக்கேடானது” என்று சொன்னாராம்..
இப்படிப்பட்ட கருத்துகள் என்றால் அது நிச்சயம் பிஜேபி சைடிலிருந்துதான் வந்திருக்கும்.
இதற்கு 2 0 0 2 -ல் குஜராத்தில் நடந்த மோசமான வன்முறை படத்தை வெளியிட்டு பதில் சொல்லி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
“அன்புள்ள ஐயா, 2 0 0 2 -,குஜராத்தில் அரசு நடந்து கொண்டதை விடவா வெட்கக் கேடாகிப் போனது?”