மண்ணை முட்டி பழக்கிய காளை மஞ்சு விரட்டில் மனுசனை குத்தி தூக்கி வீசும். தெருவில் சுத்தும் கொண்டி மாடு ஜல்லிக்கட்டுக்கு ஆகுமா?
அந்த மாதிரி ஆகிப் போச்சுங்க நாட்டு நடப்பு!
மஞ்சு விரட்டுக்கு மாடுகளை செலக்ட் பண்ணுகிற நாடுய்யா நம்ம தமிழ்நாடு!
இப்ப கன்னுக்குட்டி எல்லாம் களத்துக்கு வருதுங்க.
அத ஓரமா பத்தி விட்டுட்டு காளைகளை அடக்கப் பாருங்கப்பா!
காங்கேயம் காளை மாதிரி கம்பீரமா நிக்கிற மனுசன் கவிஞர் வைரமுத்து..
இவருக்கு திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் அமைப்பு ‘எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது.
இது பொறுக்கல பாடகி சின்மயிக்கு!
இவர் பெருமதிப்பு வைத்திருக்கிற அந்த அமைப்பு தப்பு பண்ணி விட்டதாம். வைரமுத்துவுக்கு கொடுக்கலாமா என்று கொதித்திருக்கிறார்.
மிஸ்டர் டைமண்ட்பாபு,! அடுத்த வருஷம் இந்த அம்மையாருக்கு கொடுக்க முடியுமான்னு பாருங்க சார்! மவுனம் ரவி,சிங்காரவேலன்,ரியாஸ் நீங்கள்லாம் பாபு மறந்திட்டாலும் ஞாபகப்படுத்துங்க அண்ணன்மாருங்களே!.இல்லேன்னா நீங்கள் பாரின்ல நடத்துற கலை நிகழ்ச்சிக்கு சின்மயி வராம போயிடுவாங்க!