
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய என்கிற வடிவேலு ரேஞ்சுக்கு ரகம் ரகமா நியூஸ் வருதுங்க.!
ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் அஜய் தேவ்கன் வில்லனா பரிவட்டம் கட்டப் போறார்னு ஒரு தகவல் வந்தது. உலகநாயகனுக்கும் அது சம்மதம்னு சொன்னாய்ங்க.
இப்ப திடீர்னு மாற்றம்னு கரடி வருது.
தேவ்கன்னுக்கு டேட்ஸ் இடிக்கிது.அதனால் அவர் வரலியாம்.அதுக்குப் பதிலா அக்சய்குமார் நடிக்கலாம்னு புதுசா தகவல் வந்திருக்கு.
நாளைக்கு ஷூட்டிங் ஆரம்பம்.இன்னமும் வில்லனை உறுதி செய்யலேன்னா எப்படி?












