
நிச்சயிக்கப்பட்ட பொண்ணு ஒன்றாக இருக்கும்.மணமேடையில் அமர்வது வேறு பொண்ணாக இருக்கும். இது எப்போதாவது நடக்கும்.
அப்படித்தான் இந்தியன் படத்திலும் நடந்திருக்கிறது. ஷங்கரின் உதவியாளர் வசந்தபாலன் மறைக்கப்பட்ட சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.
“ஜென்டில்மேன் படம் வந்த நேரம்!
படத்தைப் பார்த்து விட்டு ஷங்கர் சாரை ரஜினிகாந்த் கூப்பிட்டனுப்பினார். தனக்காக ஏதாவது ஸ்கிரிப்ட் பண்ணமுடியுமா என்று கேட்டார் .’இந்தியன்’பட ஐடியாவை சொல்லியிருக்கிறார் ஷங்கர் சார்!
அப்போது அந்த படத்தின் டைட்டில் ‘பெரிய மனுஷன்’அப்ப ரஜினி சார் பிசி செடியூல் .படத்தை பண்ண முடியல.
அதே ஸ்கிரிப்ட்டை கமல் சாருக்கு சொன்னதும்அவருக்கு பிடித்துவிட்டது. இப்படித்தான் இந்தியன் உருவானார்.
இன்னொரு ஐடியாவும் இருந்தது. டாக்டர் ராஜசேகரை கிழவன் வேஷத்துக்கும் நாகார்ஜுனா அல்லது வெங்கடேஷை மகன் கேரக்டரிலும் நடிக்க வைக்கலாம் என்கிற யோசனையும் இருந்தது.
சேனாபதியாக சத்யராஜையும் சந்துருவாக கார்த்திக்கையும் நடிக்க வைக்கலாம் என சில அசிஸ்டெண்டுகள் சொன்னார்கள். எந்திரன் படத்தில் கமல்சார்தான் நடிக்க வேண்டியது.ஆனால் ரஜினி சார் நடித்து விட்டார்.”என்றார் வசந்த பாலன்.












