கள்ளனுக்கு என்ன சட்டமா சம்பிரதாயமா? கர்ப்பகிரகத்திலும் கை வைப்பான்,கல்யாண வீட்டிலும் களவாடுவான்!
பர்ஹீன் பிரபாகர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘கலைஞன் ‘படத்தில் நடித்த முன்னாள் நடிகை என்பது தெரிந்தால் கருணையுடன் போய் விடுவானா?
நாலு சாத்து சாத்தி கையில கழுத்தில கிடக்கிறதை அத்துக்கிட்டுத்தான் ஓடுவான்! அப்படித்தான் ஆகிப்போச்சு.
கலைஞன் படத்தில் திவ்யா கேரக்டரில் நடித்தவர் இந்த பர்ஹீன்.கல்யாணம் ஆகி டில்லியில் செட்டில் ஆகி விட்டார்.
ஷாப்பிங் வந்தவரை சிலர் வழி மறித்து பையில் இருந்த 16 ஆயிரம் ரூபாய், செல்போனை பறித்துக் கொண்டதுடன் தர்ம அடிகளும் கொடுத்திருக்கிறார்கள். அடப்பாவமே!