பெத்த நடிகர். பேரும் பெத்த பேரு! காமடியும் கலக்கலா இருக்கும்! அந்த நடிகர் நடித்த படம் அண்மையில் கலெக்சன் அள்ளியதாம்! இதனால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஓ பேபி என்கிற படத்தில் அந்த மூத்த நடிகரையும் ஒப்பந்தம் செய்தார்கள்.இதில் சமந்தா தான் மெயின் கேரக்டர் பண்ணியிருக்கிறார்.
அந்த சீனியர் நடிகர் அனாவசியமாக படப்பிடிப்பில் தலையிடுவாராம். டயலாக்கை மாற்றச் சொல்வாராம்.இதனால் அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் .ஏற்கனவே சமந்தாவுடன் பிரச்னை செய்திருக்கிறார்.
இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த பெருசு தண்ணி போட்டுக்கொண்டு செட்டுக்கு வந்திருக்கிறது.
சமந்தாவும் படத்தின் இயக்குநரும் அந்த நடிகர் நடித்த மொத்த போர்ஷனையும் வெட்டி எறிய முடிவு செய்திருக்கிறார்கள். பெரியமனுசத்தனமாக இருக்கவேண்டிய ஆளு சில்லறைத்தனமாக நடந்துகொண்டதால் கிடைத்திருக்கிற பலன்!
கோவிந்தா !கோவிந்தா!