கன் எடுத்து சுட்டதென்ன கன்னி இளமானே ! காளையரை சுருட்டுதற்கு கண்ணடித்த இளமானே….கவித..கவித..! அப்படியே கொட்டுது!
கேரளத்து அழகியாக இருந்தாலும் தென்னகத்து மோஸ்ட் வான்டட் தற்போது பிரியா வாரியர்தான்.
ஒரு அடார் லவ் படம் அடல்ட்களை கிறுக்குப் பிடிக்க வைத்திருக்கிறது.
நேற்று ஐதராபாத்தில் ஒரு தெலுங்கு படத்தின் புரமோசனுக்காக வந்திருந்த பிரியாவாரியாரை சுற்றி வட்டமடித்தது வாலிபர் வட்டம்.
அத்தனை பேரும் கோடிஸ்வரர்கள் குடும்பத்து வாரிசுகள்!
செல்பி எடுக்க தங்களின் செல்வாக்கை காட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் தயாரிப்பாளரை நெருங்கி சிபாரிசு செய்யச்சொன்னார்கள்.
பிரியா வாரியார் அத்தனை பேருக்கும் கண் சிமிட்டல் ‘கன் ஷாட் ‘டுடன்!
அந்த படம்தான் இங்கு ! கலைப்புலி தாணுவின் கருணையில் அந்த சிமிட்டல் அழகி தமிழகத் திரை அரங்குகளிலும் வரவிருக்கிறார்.