இன்னிக்கி கோலிவுட்டில் ஹாட் டாபிக் குறளரசன் இஸ்லாம் தழுவிய செய்திதான்.!
அண்ணன் சிம்பு நாட்டிலேயே இல்லை. அப்பா,அம்மா இருவரையும் முன்னிலையாக வைத்து மதம் மாறி இருக்கிறார்.
இதற்கு முன்னர் கிறித்தவ மதத்துக்கு மாறுகிற முயற்சி நடந்து அது முடியாமல் போனது. இது குறளின் அப்பா,அம்மாவுக்கும் தெரியும்.
ஆனால் தற்போது இஸ்லாம் மதம் தழுவி இருக்கிறார்.
இதற்கு முன்னதாக இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா காதலுக்காக மதம் மாறி இருக்கிறார்.அவரைப் போலவே குறளரசனும் காதலுக்காக மதம் மாறி இருப்பதாக பேசுகிறார்கள்.
இது உண்மையா அல்லவா என்பதை டி.ஆர். தான் சொல்லவேண்டும்.
அண்ணனுக்கு முன்னதாகவே தம்பியின் நிக்காஹ் நடந்து விடுமோ! நல்லது எது நடந்தாலும் வாழ்த்துகள் முன்னதாகவே!