‘ஹெலிகாப்டர் வேண்டும், தனித்து விடப்பட்ட ராணுவ வீரர்களை கொண்டு வருவதற்கு ‘ என இரண்டு மாதங்களாக ராணுவ அதிகாரிகள் கேட்டிருந்தும் ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பாத மத்திய அரசு 44 சிஆர்பிஎப் வீரர்களை பலி கொடுத்திருக்கிறது.இது ஒருபக்கம் இருக்க பிஜேபி எம்.எல்.ஏ, டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்சாவை பதவியில் இருந்து தூக்கும்படி தெலங்கானா அரசை வற்புறுத்தி இருக்கிறார்.
டி.ராஜா சிங்.பிஜேபி கட்சி காண்டர்வர்சி எம்.எல்.ஏ என்பார்கள். தெலங்கானா அரசின் பிராண்ட் அம்பாசடராக சானியா மிர்சாவை அந்த அரசு நியமித்திருக்கிறது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கின் மனைவிதான் சானியா.
“விவிஎஸ் லட்சுமணன்,பி.வி.சிந்து ,சைனாநெய்வால் ஆகிய வீரர்கள் இருக்கிறபோது பாகிஸ்தானின் மருமகளை நியமித்தது ஏன், தூக்கு பதவியில் இருந்து” என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.