பெத்த பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது அப்பா.அம்மாவின் கடமை.! அது சினிமாக்காரர்களின் பிள்ளைகளுக்கு அது சுலபமாகி விடுகிறது.
இங்கு காதலிப்பதும் கை விடுவதும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு கை கழுவி விட்டுப் போவதைப் போல் ஆகி விடுகிறது. சிலருக்குத்தான் வீட்டுச்சாப்பாடு கிடைக்கிறது.
வடக்கே நடிக,நடிகையரின் திருமணம் பெரும்பாலும் லவ்தான்.
சாதி மதம் பார்ப்பதில்லை.
ஆனால் பலருடன் கிசுகிசுக்கப்பட்டு தொடர்பில் வாழ்ந்திருந்தும் இன்றும் சல்மான்கான் பேச்சலர்தான்.! அரை நூற்றாண்டு வயது. பிள்ளை குட்டிகளுடன் வாழவேண்டியவர்.ஆனால் குட்டிகளுடன் மட்டுமே தற்போதைய வாழ்க்கை.
பாரத் படத்தில் கத்ரினா கைப் கதாநாயகி.தற்போது படமாகி வருகிறது.
ஒரு ரசிகரின் தீவிர ஆர்வம் கத்ரினாவுக்கு ஒரு கோரிக்கை.
“மேம்!தயவு செய்து சல்மானை கல்யாணம் பண்ணிக்குங்க.உங்களுக்கு சரியான ஜோடி அவர்தான்!”
இதற்கு கத்ரினாவின் பதில் என்னவாக இருக்கும்?
அடி மனதில் இருந்து வந்த ஏக்கம் நீண்ட “ம்ம்ம்ம்! இதான் என் ரியாக்ஷன் !உண்மையிலேயே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலிங்க.அவருடன் செட்டில் இருக்கிற நேரமெல்லாம் பொழுது போவது தெரியாதுங்க.எனக்கு இந்த 2019-ல் எனக்கு ஒரு பாய் பிரண்ட் வேணும். “என்பதுதாங்க பதில் !
கஷ்டமாகத்தான் இருக்கு!