
பிரதமர் மோடிக்கு வேண்டாத விருந்தாளியாகி விட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.!
நான்தான் நடிகன் என்றால் என்னை விட உலகமகா நடிகராக இருக்கிறார் என எகிறுகிறார். நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப் போவதாக முதன் முதலில் அறிவித்து தொகுதியையும் சொன்னவர் இவரே.! 
அண்மையில் பாதாளச்சாக்கடையை சுத்தம் செய்கிற தொழிலாளர்களுக்கு பாத பூஜை நடத்தியவர் மோடி. இது தேர்தல் கால நாடகங்களில் ஒன்று என்பது நாடறிந்ததுதான்.!
அதை ஒரு பிடி பிடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
“உச்சத்திலிருக்கும் சுப்ரீம் லீடரே!
இந்த எலக்சன் டிராமா தந்திரமெல்லாம் வேணாம். நிறுத்துங்க.! பாதாள சாக்கடைத் தொழிலாளர்களுக்குத் தேவை வேலை பாதுகாப்பு.கவுரவம்,அவர்களின் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு,தொழிலுக்குத் தேவையான பாதுகாப்பு சாதனங்கள்.உங்களின் நாடகம் அல்ல!நாடகமாடுவதை நிறுத்துங்கள்.” என கண்டித்திருக்கிறார்.
வாஜ்பாயி தமிழ் மூதாட்டி சின்னப்பிள்ளையின் காலில் விழுந்தது மரியாதை.அதில்பொய்மை இல்லை.












