
அடுத்து ஒரு புயலை கிளப்ப இருக்கிறது ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ‘படம்.!
ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார் ,ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கிறார்.
அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியானது.
அதில் திணறத் திணற முத்தக்காட்சிகள்.!
“எதுக்கு இத்தனை முத்தங்கள். நறுக்கா ரெண்டு சீன் வச்சா போதாதா “என பலவிதமான கமெண்ட்ஸ்………..!
இதற்காகத்தானே ஆசைப்பட்டார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குநரும்.! சூடு இருந்தாதானே பில்டர் காபி ருசிக்கும்?
ஹீரோ ஹரிஷ் கல்யாண் ,அதாவது பிக்பாஸ் புகழ் நடிகர் “யோவ் ,எல்லோரும் விரும்புறதைத்தானே படத்தில் வெச்சிருக்கோம்.ஏன்யா விமர்சனம் பண்றீங்க?”என கேட்டிருக்கிறார்.












