
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய மூன்று பேர்.நடிக்கிறார்கள். இவர்களில் யாருக்கு வாக்கப்படும் யோகம் என்பது இயக்குநர் வடிவுடையான் கையில் இருக்கிறது.
இசை – அம்ரீஷ் .அதனால் எப்படியாவது ஒரு குத்து டான்ஸ் வைத்திருப்பார்கள் என நம்பலாம்,.
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.
“பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.”என்று அதிர்ச்சி குண்டு போட்டிருக்கிறார்.
இது மட்டுமல்ல.பரத்தை பெண்ணாகவும் மாற்றி இருக்கிறார்கள். ஹாரர் படமாம்.! எது எப்படியோ,பரத்துக்கு திருப்பு முனையாக அமைந்தால் மகிழ்ச்சி.












