
நடிகர்களை வைத்து நடத்தினால் ஓரளவுக்காவது கூட்டம் சேர்க்கலாம் என்கிற தேர்தல் கால உத்தியை ஆளும் கட்சியான அதிமுக பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது.
தேர்தல் காலத்தில் ராஜ உபசாரம். நடக்கும்.தேர்தலுக்குப் பின்னர் வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கு நாம் வணக்கம் சொல்லலாம்.தோல்வி பெற்றுவிட்டாலோ நம் கழுத்தில் துண்டு போட்டு விடுவார்கள். அப்புறம் மரியாதை தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.
ரவிமரியா என்கிற துணை நடிகரை அதிமுகவுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள்..இவர் ஒரு காலத்தில் இயக்குநராக இருந்து வில்லன் காமடி என கலர் மாறியவர்.
பவரில் இருக்கிறபோதே நாலஞ்சை தேத்திக்கிட்டாத்தான் நல்லது.
இவரை கட்சிக்கு கொண்டுவந்தவர் லியாகத் அலிகான். முன்பு கேப்டனின் சில படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். தற்போது துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அறிக்கைகள்,எழுதிக்கொடுத்து வருகிறார் என்கிறார்கள். பேச்சையும் இவர்தான் எழுதிக் கொடுக்கிறாராம்.












