
சுடச்சுட …
ரஜினி 166 படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.லைகாவின் தயாரிப்பில்.!
ஏஆர் முருகதாஸ் இயக்கம்.!
மிகவும் மிரட்டலான தோற்றம்.
கோபப்பார்வை.முகச்சுழிப்பு, மேக மூட்டமாக செல்லுகிற புகைத்தல், துப்பாக்கி முனை.கருப்புக்கண்ணாடி.
இப்படி உக்கிரம் நிலை கொண்ட போஸ்டர்.
தைலாபுரம் ஏரியாவில் இருந்து வந்திருக்கவேண்டுமே வெடி குண்டு விமர்சனம் என எதிர்பார்க்க வைத்திருக்கிறது. ஆனால் பெண்களை மகா கேவலமாக இழிவு படுத்திய படத்தைக் கூட அந்த கலாசார காவலர்கள் கண்டுவில்லை.
இந்த நிலையில் ரஜினியின் புகைத்தல் படத்தைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களின் இலக்கு தளபதி விஜய்தான்!
தேர்தல் நேரத்தில் கொள்கையாவது மண்ணாவது!












