நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும், என்ற கோரிக்கையை சிவாஜியின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.இந்நிலையில்,ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடிகர் கமலஹாசனும் இந்த அறிவிப்பினை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்’ என்று தனது அறிக்கையின் மூலம் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கமலஹாசன்.மேலும்நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக முதல்–அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.நடிகர் சங்க சரித்திரத்தில் உங்களது செயல் சாதனையாக என்றும் போற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் அணியினர் தரப்பில், விஷால் கூறியதாவது, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்த ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 2002ம் ஆண்டில், சென்னை அடையாறில், இதற்கென இடம் ஒதுக்கப்பட்டது. 2015ம் ஆண்டில், இதற்கான பணியை, அரசு துவக்க உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
நடிகர் சங்கம், இதற்கான பணிகளை மேற்கொள்ளாததது, நடிகர்களுக்கே பெருத்த அவமானமாக உள்ளது. தமிழக அரசு மணிமண்டபம் கட்ட முன்வந்திருப்பது, ஒரு நடிகருக்கு செய்யும் மரியாதை என்று கருதாமல், நடிப்புக்கே செய்யும் மரியாதையாக நாங்கள் கருதுகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், எங்கள் அணி வெற்றி பெற்றால், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டுவோம் என்பதில் தங்களுக்கு எவ்வித மாற்றமுமில்லை என்று விஷால் கூறினார்