மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல், ’மெஜந்தா’!
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம், ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்துக்கு, ’மெஜந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது ,
இயக்குநர் பரத் மோகன் ’இயக்கத்தில் உருவாகும் இப் படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இவர்களுடன் ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒ௫ அரிதான காதல் கதையாக உருவாகியுள்ள அடர்த்தியான ‘மெஜந்தா’ வண்ணம் படத்தின் மையக்கருவான ‘மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல்’ என்பதை பிரதிபலிக்கிறது.இப்படம் குறித்து இயக்குனர் பரதமோகன் கூறுகையில்,” உளவியல் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் இரண்டு மனங்களின் வெவ்வேறு பக்கங்களை இந்தக் கதை நுணுக்கமாக ஆய்வு செய்கிறது. இந்தக் கதையின் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான தருணங்களை உணர்ந்து நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கோத்தகிரியில் முக்கிய காட்சிகளும் மற்ற ஷெட்யூல் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, ஆழமான உணர்வுகளுடன் 2026ஆம் ஆண்டின் தவிர்க்க முடியாத காதல் படமாக ‘மெஜந்தா’ இருக்கும்” என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை பல்லு, மேற்கொள்ள, தரண் குமார்,இசையமைத்துள்ளார் .