நடிக்கத்தான் வாய்ப்புகள் இல்ல.உல்லாசமாக விளையாடவாவது செய்யலாமே என்கிற ஆசை இருக்கத்தானே செய்யும்?
அமலாபாலுக்கும் அத்தகைய ஆசை! கடந்த ஆண்டு இரண்டே படங்கள்.
தற்போது கையில் ‘அதோ அந்த பறவை போல,’ ‘ஆடை’என இரு படங்கள்.
2017-ல் இயக்குநர் ஏஎல்.விஜய்யை காதலித்து மணந்து கொண்டவர்தான் இந்த அமலாபால். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே கல்யாண வாழ்க்கை கசந்து விட்டது. விஜய்யின் குடும்பத்தின் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லையோ என்னவோ பிரிந்து விட்டார்.
அதன் பிறகு காடு கடல் நாய் என புகைப்படங்கள் எடுத்து தனது சோசியல் மீடியாவில் வெளியிடுவது வாடிக்கையானது..தற்போது அலைச்சறுக்கு விளையாட்டு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இப்படியாவது படங்களை காட்டலாமே என முடிவு செய்து விட்டாரோ என்னவோ! குடும்பவாழ்க்கை தொடர்ந்து இருந்தால் கையில் குழந்தையுடன் விளையாடுகிற வாய்ப்பு கிட்டியிருக்கும்.