“என்னம்மா இப்படி மெலிஞ்சிட்டிங்களே?”என்றதும் மெலிதான மென்னகை ராய் லட்சுமியிடம்!
“‘ஜூலி’ படத்தின் போது தான் உடல் எடையை குறைக்க தொடங்கினேன் .அப்ப பல கஷ்டங்களை உடல் ரீதியாக சந்தித்தேன் .ஒரு மாதத்தில் குறைக்க சொன்னதால் ஜிம்முக்கு போய் சாப்பாடு சரிவர இல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டேன் .
அப்பத்தான் யோசிச்சேன். ஏன் இப்படி கஷ்டப்படுறோம், எடையை குறைச்சு, அப்புறம் ஏத்தி, பெர்மனண்டா குறைச்சா என்னன்னு முடிவு செஞ்சேன்.!
பக்காவா என் உடலுக்கு மருத்துவ ரீதியா என்னென்ன தேவை, அப்படீங்கிறதை தெரிஞ்சுகிட்டேன் .நிறைய விட்டமின், ஜிங்க்ஸ் எல்லாமே லோவா இருந்தது.அதெல்லாம் சரி பண்ணினேன்.
ஜிம்மெல்லாம் போறதில்ல .டயட்டில் பால்,சப்பாத்தி ஒதுக்கினேன்.சாதம் ,உருளைக்கிழங்கு… இப்படி பசிக்கும் போது சாப்பிடுவேன்.டைம் கிடையாது.75 கிலோவில் இருந்து 59 கிலோவா குறைச்சுட்டேன்.”
“அதான் இன்ஸ்ட்கிராம்ல கவர்ச்சி கடையா??

“அந்த பக்கத்தில் அடிக்கடி பிகினி உடையில் கவர்ச்சியா படம் போடுறீங்களேன்னு கேட்கிறாங்க. ஹாலிவுட்ல,மும்பைல இன்னிக்கு பிகினி உடை என்பது மிகவும் சர்வசாதாரணமாகி விட்ட விஷயம்.
ஒரு பிகினி போட்டோ இன்ஸ்ட்டாகிராம் பக்கத்துல போட்டா அதுக்கு நிறைய லைக்ஸ் குவியுது.அப்ப அதுக்கு வரவேற்பு இருக்குன்னு தானே அர்த்தம் .அதுக்கு தனியா அட்சராக்சன் இருக்கு.
அது வல்கர் கிடையாது.சுவிம்மிங் பூலில் சுடிதார் போட்டுட்டு போக முடியாது.ஐ யாம் வாட்டர் பேபி.எனக்கு வாட்டர் பிடிக்கும்.பீச் பிடிக்கும்.
உங்களுக்கு பிடிக்கைலைனா பாக்காதீங்க.
ஏன் பாக்குறீங்க.உங்களுக்காக நான் பிகினி போடாமல் இருக்க முடியாது.அப்படியெல்லாம் பார்த்தா இந்த உலகத்துல வாழவே முடியாது.”
“தமிழில் கைவசம் படம் இருக்கா?”

“தமிழில் இப்ப நீயா-2 ,சிண்ட்ரெல்லா, மிருகா உள்பட மூணு படம் பண்றேன்.மலையாளத்துல ஒரு படம் ரிலீஸாக போகுது.கன்னடத்துல 2 படம் அப்புறம் பாலிவுட்ல 3 படம் இருக்கு.”
உங்க பயோகிராபி படமாக்கப்பட்டா நீங்களே நடிப்பீங்களா?”
“என்னோட பயோ கிராபியை 2 மணிநேரத்துல படமாக்கமுடியாது.அவ்வளவு இருக்கு.(சிரிக்கிறார்.)
கேரளாவு ல நீயா-2 படப்பிடிப்பு காட்டுப்பகுதி ஒரு மரத்துக்கிட்ட சாஞ்சு நின்னு கிட்டு இருந்தேன்
அப்ப ஜெய் தூரத்துல நின்னு என்னை மொபைலில் படம் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு.
நானும் ஸ்டைலா போஸ் கொடுத்தேன் .
அப்ப கிட்ட வந்து, லட்சுமி உனக்கு பாம்பு பயமே கிடையாதான்னு கேட்டாரு.
ஏன் கேட்கிறீங்க ?ன்னு கேட்டேன் .
உன் தலைக்கு மேல பாம்பு இருக்கு பாரு, அதைத் தான் படம் எடுத்தேன்னு சொன்னாரு.
அவ்வளவு தான் அந்த இடத்தை விட்டு ஒடி வந்து திரும்பி மரத்தை பார்த்தா, மரம் கலரிலேயே ஒரு பாம்பு இருந்தது. அதை மறக்கவே முடியாது”
.அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கும் நீங்க இப்ப யாரை காதலிக்கிறீங்க”?
“. நான் யாரையும் காதலிக்கல .இப்ப காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கல. ஆனால் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணுவேன்”
.இப்ப நடிப்புதான் முக்கியம்.காதல் அப்புறமா பாத்துக்கலாம்.”
“அடிக்கடி காதல் வந்தா, அது காதலா”?
“.எந்த காலத்துல இருக்கீங்க. அடிக்கடி வந்தா தான் அதுக்கு பேரு காதல் (சிரிக்கிறார்).காதல் என்பதே புரிதல் தான்.அந்த புரிதல் சரியா அமைந்தா தான் காதல்.இப்ப எனக்கு காதல் வரல அது எப்போ வரும்ன்னு சொல்ல முடியாது.எனக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க.ஆனால் அவங்க லவ்வர் இல்லை. அவங்க என் பிரண்ட்ஸ் மட்டுமே.!”