
சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களால் அவரது கேரியர் கிராஃபை மேலே நகர்த்தி செல்கிறார்.
அவரது குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான எஸ்.கே.14படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘ஹீரோ’ ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, கே.ஜே.ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கிறார்.
இயக்குனர் பிஎஸ் மித்ரன் பற்றி அவர் கூறும்போது, “மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குனராக தனது இரும்புத்திரை படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கற்பனை செய்து பார்க்க முடிந்தது” என்றார் ராஜேஷ்.
சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பை கையாள்கிறார்.
இதே ஹீரோ என்கிற பெயரிலும் ஒரு படம் தயாராகிறது. பிரச்னை வருமோ என்னவோ.அந்த படத்தின் ஹீரோ தேவரகொண்டா.தெலுங்கு நடிகர்.
யாருடன் யார் மோதுகிறார் என்பது தெரியவில்லை.












