வருடா வருடம் எண்பதுகளை சேர்ந்த நடிகர்,நடிகைகள ஒரே இடத்தில் சந்தித்து அந்நாளை அமர்க்களமாக கொண்டாடுவது வழக்கம், இந்த வருடம் இந்நிகழ்வு நேற்று சென்னை ஆலிவ் பீச்சில் உள்ள நினா ரெட்டி கெஸ்ட்ஹவுசில் கொண்டாடப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை நடிகைகள்,லிசி,சுகாசினி,குஷ்பூ ஆகியோர் ஏற்க,’மௌலின் ரக்’ தீம் முடிவு செய்யப்பட்டு ,பிரஞ்ச்ஸ்டைலில் சிவப்பு,தங்கம் நியான் நிறங்களில் அந்த இடம் அலங்கரிக்கப்பட்டு ரெட் கார்பெட்,ரெட் வெல்வெட்,ரெட் ரோஸ்,மற்றும் நடிகர் நடிகைகளின் உடைகள் என எல்லாம் சிவப்பு வண்ணமாக காட்சியளிக்க,அந்த இடமே தேவலோகமாய் காட்சியளித்தது.
இதில்,பாலிவுட்டைச் சேர்ந்த ஜாக்கி செராப்,பூனம் தில்லான், மற்றும் தென்னகத்தைச் சேர்ந்த சுவப்னா,ஜெயசுதா,பார்வதி,சத்யராஜ், சிரஞ்சீவி,மோகன்லால்,வெங்கடேஷ்,பிரபு,மோகன்,சரத்குமார்,பிரதாப்போத்தன் ஜெயராம்,ரகுமான்,ராஜ்குமார்,சுமன், பாக்யராஜ், பானுசந்தர், லிசி,குஷ்பூ, சுமலதா,சரிதா, ராதிகா,ரம்யா கிருஷ்ணன் ,ஜெயசுதா சோபனா,பூர்ணிமா பாக்யராஜ், சுகாசினி,ராதா,உள்பட மொத்தம் 34 பேர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் தொடக்கத்தில்,பத்து நிமிட வீடியோ காட்சிகள் போடப்பட்டது.இது வரை நடந்த கொண்டாட்டங்கள் பற்றி பேசப்பட்டது. அதன் பின் புகைப்படக்காரர் ஸ்டில்ஸ் ரவி புகைப்படங்கள் எடுத்தார்.
தொடர்ந்து சுமலதா,ஜாக்கிசெராப்,ஜெயசுதா என்பதுகளின் ஹிட் பாடல்களை பாட, இந்தி,மலையாளப் பாடல்களை மோகன்லால் சுகாசினி பாடினர்.பூர்ணிமா,சுகாசினி மேனகா ஆகியோர் ஆட,இதற்கிடையில் குஷ்பூ 12 லுங்கிகளை கொடுத்து அனைவரையும் லுங்கி டான்ஸ் ஆட வைத்தது பார்ட்டியின் உச்ச கட்டமாக அமைந்தது.ஜாக்கி செராப் அந்த 12 லுங்கிகளையும் ஞாபகார்த்தமாக கொண்டு சென்றது வேறு விஷயம்! மொத்தத்தில் விடிய விடிய நடந்த இந்த கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டுகளை விட சிறப்பாக அமைந்த சந்தோஷத்தில், நட்சத்திரங்கள் உற்சாகத்துடன் கலைந்துசென்றனர்.