போக்கத்தவனுக்கு புகுமிடம் ஊர் சத்திரம் என்பார்கள்.
அதைப்போல திரைப்படங்களில் போதிய வாய்ப்பு இல்லாதவர்களுக்கு புகுமிடமாக இருப்பது பிக்பாஸ் என்கிற பொழுது போக்கு நிகழ்ச்சி.
இது சித்திரை திருவிழா மாதிரி வருஷத்துக்கு ஒருதடவை வரும்.
சித்திரை திருவிழா உறுதி.பிக்பாஸ் என்பது வந்தாலும் வரும் .வராமலும் போகும்! கடைமடைப் பகுதிக்கு காவிரி வருவதைப் போல.!
கடந்த தடவை பிக்பாசில் அராத்து ஐஸ்வரியா என்கிற பெருமை இந்த ஐஸ்வரியா தத்தாவுக்கு!
இவரது காதலர் கோபி என்பவர் புழல் வாசி என்கிறார்கள். கொடிகளில் சுருட்டி சுகமாக வாழ்ந்தவர் என்கிறார்கள்.
ஐஸ்வரியா,நளினி என்பவர் இணைந்து நடத்தியதாக சொல்லப்படும் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடியில் கோபிக்கும் தொடர்பு என்கிறார்கள் இது உண்மையா பொய்யா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
தற்போது தேடல் லிஸ்ட்டில் கோபியும் இருப்பதாக சொல்கிறார்கள்.