செவ்வாய்க் கிழமைன்னா சிலருக்கு அது வெறு வாய்.! வருவாய் இருக்காதுன்னு சொல்லிருவாங்க.!
அதனால எலக்சன்,கலெக்சன் சம்பந்தப்பட்டவங்க காசி அவ்வளவு பெரிய அளவுக்கு ஏறக்க மாட்டாங்க.
அதனால ரஜினி,கமல் இந்த ரெண்டு பேருக்கும் உருவேத்தின புண்ணியவான்களை பாத்தம்னா தண்ணியாவது குடிக்கலாமேன்னு பத்திரிகைகுள்ள தேடுனா…அட சார் கட்டிங் போட்ட எபெக்ட் சார்!
“தம்பி! நான் அரசியல் பேசுவதும் இல்ல.எழுதுவதும் இல்ல.இடைக்கால ( அதென்னவே இடைக்கால) துறவறம் மேற்கொண்டிருக்கிறேன்.!( முழுசாவே காவிய கட்டிட்டு கமண்டலத்த கையில புடிச்சுக்கவேண்டியதுதானே!) ரஜினிகாந்த் கட்சிய ஆரம்பிச்சா ( உங்களுக்கே அந்த சந்தேகம் இருக்கா.!) என்னை அரசியல் மேடைகளில் ,பார்க்கலாம்.இல்லேன்னா துறவு நிரந்தரம். இப்போதைக்கு இலக்கிய கூட்டங்களில் பேசுகிறேன்.அதற்காக நிறைய வாசிக்கிறேன். செவ்வாய் தோறும் மவுன விரதம் இருக்கிறேன்”
யார்னு தெரியிதா?
ஒரு காலத்தில ரஜினி “இதோ வந்திட்டார் அரசியலுக்கு.! புரட்டிப் போடபோறார் “னு திருச்சியில் டமாரம் அடிச்சாரே அந்த தமிழருவி மணியனேதான்! இப்ப செவ்வாக்கிழமை மவுன வாசியாகிட்டார்.
மக்கள் நீதி மய்யத்திலும் ஒரு இலக்கியவாதி மையம் கொண்டிருந்தாரே …உயர்மட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்னு அவர் போட்ட போடுதான் சேந்தியில செமிச்சதல்லாம் அப்படியே கொட்டிப்போச்சு!
“அய்யயோ…நான் அரசியலிலேயே இல்ல..எதை செய்தாலும் அவருக்கு என ஞாபகம் வந்திரும்.அப்படிதான் அவரது புதிய முயற்சியில் என்னையும் இணைத்துக் கொண்டார். ( பரிசோதனை எலி?)நமக்குத்தான் யாரையும் வையவும் தெரியாது.யாராவது வஞ்சா கேட்டுக்கவும் முடியாது.பிறகெப்படி அரசியலில் தாக்குப் பிடிக்க முடியும்.?பதவி வேணாம் விலகிக்கிறேன்னு சொன்னேன். ‘சரி நீங்க விலகிங்க, ஆனா விலகினதா காட்டிக்காதிங்க,பட்டிமன்றம் சினிமான்னு பிசியா இருக்கேன்” என்றார்.