
திருமணத்துக்கு முன்னரேயே தித்திக்கும் இதழ்களை சுவைக்காமல் இருக்க இயலாது.
அது இல்லையேல் காதலே இல்லை என்றாகி விட்டது இன்றைய இளைய தலைமுறைக்கு!
ஆனால் அதே முத்தம்,அணைப்பு இன்னும் சிலபல சித்திர வேலைப்பாடுகள் எல்லாம் தேனிலவு என இருவரும் தனித்து செல்கிறபோது அதன் மணமும் சுவையும் தனி.
ஒரு கவிதையில் ..
எழுதிய புண்ணியவான் யாரென தெரியவில்லை…
சொல்கிறார்;
“நாம் இதழோடு இதழ் சேரவே,
கொத்துப் பூக்களெல்லாம்
மெத்தை பூக்களானது!
உன் மடியில் நானும்,என்மடியில் நீயும்
உறங்கி உறங்காமல் பேசியபோது
இருளுக்கும் காது முளைத்தது!”
நடிகர் ஆர்யா சாயேஷா இருவரும் தேனிலவு சென்றிருக்கிறார்கள்.
எங்கே என்பது நமக்குத் தெரியாது.
அவர்களின் தனிமை இனிமை காண எங்கே சென்றால் என்ன?
வாத்சாயனின் கண்டுபிடிப்புகளை ரசனையுடன் அனுபவித்தால் சரி!
அது சரி,ஆர்யாவுக்கு தெரியாததா?












