
இயக்கம் : ஜே.பி.ஆர், சாம் சூர்யா ,வசனம் :கருந்தேள் ராஜேஷ், ஒளிப்பதிவு :ஜனா, மதுபாலா,பாபி சிம்ஹா,எம்.எஸ்.பாஸ்கர்,ரம்யா நம்பீசன்,
பிரமிக்க வைக்கிறார் மதுபாலா ,ஆனால் ஓவர் ஆக்டிங் மக்களே!
தமிழகத்தின் புகழ்மிக்க இரண்டு முதல் அமைச்சர்களை நினைவு படுத்துகிற வகையில் அவரது அமைச்சர் கேரக்டர் அமைந்திருக்கிறது.
முதலில் அவர் ஊனமுற்றவர்.வீல் சேர் அமைச்சராக பணியாற்றுகிறார். அடுத்து எல்லா அரசியல்வாதிகளையும் குனிந்து கும்பிடு போட வைத்த பெண் அமைச்சர், பொட்டும் ஒற்றை மெல்லிய நாமமும் பளாரென அறைந்து யாராக இருக்கும் என யூகிக்க வைக்கிறது.
“வீல் சேர் டயரை நக்கிட்டு இருந்தா இருங்கடா ,இல்லேன்னா ஓடுங்கடா!”என்கிற கருந்தேள் ராஜேஷின் வசனம் சத்தியம் பண்ணுகிறது அவர் முன்னாள் முதல் அமைச்சரின் நகல் என்பதை.! முன்னாள் முதல்வரைப் பற்றி செவி வழியாக கேட்ட செய்திகளை வைத்து பின்னி எடுத்திருக்கிறார் போலும் வசனகர்த்தா,
கதையின் நாயகன் பாபி சிம்ஹாவுக்கு என்ன சோதனையோ!யாரோ குரல் கொடுத்து கொன்றிருக்கிறார்கள். ஜோடியான ரம்யா நம்பீசனுடன் ஒருநாள் கூட குடும்பம் நடத்தவில்லை. ரம்யாவுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்குத்தான் கேரக்டர். முன்னாள் பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்ட கலவரத்தில் தாயை பிரிந்து லிவிங்ஸ்டனால் தத்து எடுக்கப்பட்டு வளர்த்து ஆளாக்கப்பட்டவர்தான் இந்த பாபி சிம்ஹா.
இவர் மதுபாலாவின் மகன் என்பதை கடைசி காட்சியில் சொல்கிறபோது அடடே,,அடடே…சொந்த அம்மாவையா கைது செய்து சிறையில் அடைக்கத் துடித்திருக்கிறார், கடமை வீரனய்யா! அத்தனை காலமும் சொந்த அம்மாவை அடையாளம் காண முடியாதவர் சில வினாடிகளில் அம்மா என தவிப்பது,மதுபாலா உருகுவது ..நம்பமுடியவில்லை.!
தன்னை பேட்டி எடுக்க வந்த ஜர்னலிஸ்ட் ஒருவர் மர்மமாக கொல்லப்பட அதன் தொடர்ச்சியாக இன்னொரு கொலையும் நடக்கிறது.போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா விசாரணையைத் தொடங்க ஹரியானா மந்திரியின் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது.அதன் லிங்க் தமிழ்நாடு மந்திரி மந்திரிமதுபாலா .!
இந்த கதையைத்தான் லாஜிக் இல்லாமல் இயக்குநர்கள் ஜே.பி.ஆர், சாம் சூர்யா குழப்பி அடித்திருக்கிறார்கள். லாஜிக் மீறல்கள் அதிகம்.
சினிமா முரசம் ரேட்டிங்.
![]()












