
திரை உலக புள்ளிகள் தன்னை கெடுத்ததாக பலரது பெயரை சொல்லிக்கொண்டு திரிபவர் ஸ்ரீ ரெட்டி. இவருக்கு வாய்ப்பும் கொடுக்காமல் வசிப்பதற்கு இடமும் தராமல் தமிழ்நாட்டுக்கு விரட்டியது ஆந்திரா.
இங்கு இரண்டு பெரிய பிளாட்களில் இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. மும்பை ஹீரோயின்களுக்குக் கூட சென்னையில் இரண்டு பிளாட் இல்லை. ஆனால் ஸ்ரீ ரெட்டிக்கு இரண்டு.! என்ன வருமானம் வருகிறது,எத்தனை படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரியாது. ஆனால் பிசி.!
நேற்றைய முன்தினம் வீடு புகுந்து சிலர் தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்து வாழ்க காவல்துறை என வாழ்த்துப் பத்திரமும் வாசித்திருந்தார்.
நமது காவலர்கள் சென்று விசாரணை நடத்தியபோது சிசிடிவி கேமராவின் பதிவுகளை கேட்டிருக்கிறார்கள். வந்தவர்கள் கேமராவை மறைத்து விட்டுதான் தாக்க௯இ இருக்கிறார்கள் என்பதாக சொல்லவே சந்தேகம் வந்திருக்கிறது.
பொய்யான புகார் என்பதாக தெரிய வந்திருக்கிறது.
என்ன செய்ய முடியும் ? ஸ்ரீ ரெட்டியை எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள்.












