
இயக்கம் : தியாகராஜன் குமாரராஜா. திரைக்கதை: மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், தியாகராஜன் குமாரசாமி.
விஜய்சேதுபதி,பகத் பாசில்,சமந்தா,ரம்யா கிருஷ்ணன், இசை: யுவன்சங்கர், ஒளிப்பதிவு: பி.எஸ்.வினோத்,நீரவ்ஷா. படம் ஓடும் நேரம்: 175 நிமிடம்.
***************************************************************************
இருளில் தொடங்குகிறது.
“என்னடா பண்றே?” செல்போனில் பெண்ணின் குரல்.
ஆண் குரலில் விரக்தி..வெறுப்பான பதில்.
“நீ உடனே வீட்டுக்கு வாடா!” இப்போது அதே பெண்.குரலில் கிக்.
“புருசன் இல்லியா?”–இவன்.
“ரிகர்சலுக்கு போயிருக்கார்.அதனால்தானே வரச்சொல்றேன்!வாடா!”–அவள்.
வீட்டுக்குள் பல இடங்களுக்கு செல்லும் கேமரா காமனின் களைப்பு சத்தமுடன் படுக்கை அறையில் நிலைக்க, பெண்ணின் தாபமுடன் “என்னடா அவ்வளவுதானா…இரு நான் ட்ரை பண்றேன்” என அவனின் மேல் ஏறி இயங்க சற்று நேரத்தில் அவனுக்கு யமலோக சீட்டு!
இந்த நேரம் பார்த்துதான் அவளின் கணவன் வரவேண்டுமா?
கள்ளப்புருசனுடன் சல்லாபித்த அவளாக சமந்தா. ஏமாந்த புருசனாக பகத் பாசில்.
இதே ஜோடி கிளைமாக்ஸ் முடிந்து நடந்து வருகிறது.
“உன்னை ‘போட்டவன்’ உடனே போய் சேந்துட்டான். ‘போட ஆசைப்பட்டவன்’ பாதியிலேயே செத்துட்டான். இனி போடப்போற நான்” என்கிற பாணியில் உரச …சூப்பர் டீலக்ஸ் பத்திரமாக சேர்கிறது.
இந்த இரு சம்பவங்களுக்கு இடையில் மேலும் இருவர் கதை
நடந்தேறுகிறது.
அம்மா ரம்யாகிருஷ்ணனின் ப்ளு பிலிம் நடிப்பை பார்த்து விடும் மகனின் மனநிலையும். தந்தையாக இருந்த விஜய்சேதுபதி தாயாக திருநங்கையாகி வீடு திரும்பும்போது மனைவி மகனுக்கு இருக்கும் மன நிலையும்தான் மொத்த நேரத்தையும் கடத்துகிறது.
சவாலான கேரக்டர்கள். இன்றைய சமுதாய அவலங்களுக்கு ஆளாகிற கேரக்டர்களை சுமப்பதற்கும் தில் வேண்டும். சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சமந்தாவின் நடிப்பில் அந்த கேரக்டரின் ஆளுமை இருக்கிறது..இதெல்லாம் மீ டூ வில் வருமா வராதா, கலாச்சார சீர்கேடா,அல்லது ஒழுக்கச்சிதைவா ,எதிர்வரும் காலத்தில் கணவன் மனைவி இடையே இத்தகைய உறவுகள் என்பதெல்லாம் மலிவாகத்தான் இருக்குமா? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் “பெரிய இடங்களில்’ விடை இருக்கிறது. மேலை நாகரீகத்தின் தாக்கம்தான் இனி தமிழ்ச்சினிமா.! பெஸ்ட் ஆக்டிங் சமந்தா.!
பொண்டாட்டி வாயாலேயே அவளின் கள்ளப்புருஷன் ‘போட்ட’ கதையை கேட்கும் புருசனாக பகத்பாசில் சூப்பரப்பு.!அவனவன் தூக்கில் தொங்கும் காலத்தில் கெட்டுப்போன பொண்டாட்டியை தூக்கி சுமக்கும் இவருக்கு கெட்டுப்போன மனைவிகள் சங்கம் ( வந்தாலும் வரும்.) சார்பில் விழா எடுத்தாலும் தகும்யா.!
“நான் அம்மன் வேஷம் போட்டவள்தான் ,இந்த மாதிரியும் வேஷம் போடவேண்டியதாக இருக்கிறது”என்கிற தன்னிலை விளக்கத்தை மகனிடம் சொல்கிறபோது சன்னி லியோனின் நினைவு வராமல் இருக்காது.
மக்கள் செல்வன் என்கிற மரியாதை உள்ள ஒரு நடிகர் திருநங்கை வேடம் புனைந்தது துணிகர முயற்சிதான்.! அதிலும் அந்த காவல் நிலைய அதிகாரியின் தகாத ஆசைக்கு இணங்கி முட்டி போட்டு முகம் சுழிக்க வேண்டிய …அந்த திருநங்கை சமூகத்துக்கு எத்தகைய ஆபத்துகள், அவலங்கள், விபத்துகள் சுற்றி வலை பின்னி கிடக்கின்றன.இயக்குநர் பாராட்டுக்குரியவர்.
படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள். உபயம் இதே இயக்குநர்தான்!
படத்துக்கு அந்தந்த காட்சிகளுக்கேற்ப பழைய படங்களின் பாடல் வரிகளை யுவன் சங்கர் பயன்படுத்தி இருப்பது இயக்குநர்- இசை அமைப்பாளரின் கூட்டு முயற்சியா? எப்படி இருந்தாலும் அது சுகம்.!
பி.எஸ்.வினோத்,நீரவ்ஷா இந்த இரு ஜாம்பவான்களின் கேமராவுக்கும் எவ்வளவோ ஆசைகள் இருந்திருக்கும்போல!எட்டிப்பார்த்தும் ஒட்டிப்பார்த்தும் விளையாடி இருக்கின்றன.
பொதுவாக நம்ம மக்களுக்கு அந்தந்த கேரக்டர்கள் மாதிரிதான் நடிகர்களும் இருப்பார்கள் என்கிற நம்பிக்கை மனோபாவம் அதிகம்.நல்லவர் நம்பியாரை நேரில் பார்த்தாலும் மோசமானவர் என்பதாகவே நம்பினார்கள்.அந்த ஆபத்து இந்த படத்து நடிகைகளுக்கு அதிகமாகவே இருக்கிறது.
சினிமா முரசம் ரேட்டிங்.
![]()












