ஒரு பிள்ளை பெத்துக்கிறவரைதான் புதுப்பொண்டாட்டி. அதுவரை மல்லிப்பூவும் அல்வாவும் கிடைக்கும். பிள்ளை பிறந்ததும் செவந்திப்பூ கூட வாங்கித்தரமாட்டான் .
“உன் கொண்டைய்ல பூ வைச்சாதான் அழகா, சும்மாவே ஜொலிக்கிறேடி” என்று வாயிலேயே சொல்லி சோலியை முடிச்சிட்டுப் போயிடுவான்.
ஆனா நம்ம பிரியங்கா சோப்ரா காதல் கல்யாணம் ஆறுமாசம் கூட தாக்குப் பிடிக்கலியே!
டைவர்ஸ் வாங்கப்போறதா கவர் ஸ்டோரி .இங்கிலாந்தில.!
117 நாளிலேயே கசந்து போனதால் கருத்து வேறுபாட்டினால் டைவர்ஸ் அப்ளை என்பதாக செய்தி வாசித்திருந்தார்கள்.
ஆனால் பிரியங்கா தரப்பில் அப்படியெல்லாம் இல்லை. அவங்க ஜாலியாத்தான் இருக்காங்க. பிரியிறதுக்கு வாய்ப்பு கிடையாது என்று அடித்து சொல்கிறார்கள்.
நல்லநேரம் பார்த்து பிள்ள புளியங்கா கேக்கிற சேதியை சொல்லுங்க மக்கா.!மாங்கா சீசன் முடியிறதுக்குள்ள மசக்கை வந்தாகணும்.!