
மக்கள் நீதி மய்யம் பற்றி உலகநாயகன் என்னவெல்லாம் சொன்னாரோ அதற்கு முற்றிலும் மாறாகத்தான் எல்லாமே நடக்கிறது.
அவரைச்சுற்றி ‘அறிவார்ந்த கூட்டம்’ இருக்கிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் நீதிபதிகள் முதலாளிகள் என இருக்கிறார்கள் .அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலிலும் மன்றத்துப் பிள்ளைகள் இல்லை .
மக்களை அடக்கியே,அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர்கள்தானே அவர்கள்? அவர்களால் என்ன செய்யமுடியும் என்கிற வெறுப்புக்குரல்தான் கேட்கிறது.
அண்மையில் யார் வேண்டுமானாலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்கிற வினோதமான அறிவிப்பின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பத்தாயிரம் கட்டி மனு கொடுத்திருந்தார்.அவரின் பெயர் புகழேந்தி
அவருக்கு சீட்டுக் கிடைக்கவில்லை.
“எதோ கார்ப்பரேட் கம்பெனி மாதிரிதான் அங்கே நடத்துகிறார்கள். கோவை சரளா என்பவர் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் என்றால் அவருக்கு அவ்வளவு அரசியல் அறிவு இருக்கிறதா? திருப்பி பணம் கிடைக்காது என்கிற கண்டிஷனுக்கு கட்டுப்பட்டு கையெழுத்துப் போட்டிருக்கிறேன்.என்றாலும் நான் ஒய்வு பெற்ற எஸ்.ஐ. நான் கட்டிய பத்தாயிரத்தில் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மீதி பணத்தைக் கொடுங்கள்”என கமலிடம் கேட்டிருக்கிறார்.
இன்னும் கட்சியைத் தொடங்காத சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என நம்பலாம்.












