ஏப்ரல் 10.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’படத்தின் தொடக்க விழா மும்பையில் இன்று சிறப்புடன் நடந்தேறியது.
ஏஆர் முருகதாஸ் கதை வசனம் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப்போகிற படம். லைகா வின் பிரமாண்டமான தயாரிப்பு. ரஜினிக்கு 166 வது படம். அனிருத் இசை அமைத்திருக்கிற படம்.
ரஜினிக்கு இரட்டை வேடம் என்பதாக சொல்கிறார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்பது சில நாட்களில் தெரிந்து விடும் .
நயன்தாராவுடன் இன்னும் சில நடிகைகளின் பெயர் வெளிவந்ததை நிர்வாகம் அடியோடு மறுத்து விட்டது. நயனை விட வேறு யாரும் கமிட் ஆகவில்லை.