
வர வர பொலிடிசியன்களுக்கு பொறுமை என்பது வெறுமையாகி வருகிறது.பொசுக் பொசுக்குனு கோபம் கொப்பளிக்கிது.
அடக்குங்க ராசா.!
மோடியின் பயோபிக்கில் நடிகர் விவேக் ஓபராய் என்கிற பாலிவுட் நடிகர் மோடியாக நடித்திருக்கிறார்.
முன்னோட்டத்தைப் பார்த்த நடிகை காஜல் அகர்வால் பிரமாதம்னு நடிகரை பாராட்டி இருக்கிறார்.
“விவேக்! பிரமாதம்யா!உடனே பார்க்கனும்னு ஆசையா இருக்கு. மொத்த டீமுக்கும் பாராட்டுகள்.நிச்சயம் இந்த படம் சிறப்பாக இருக்கும் .வாழ்த்துகள்” என்று டிவீட் பண்ணியிருக்கிறார்.
அவ்வளவுதான் ! மோடியின் மொத்த எதிர்ப்பாளர்களும் பொங்கி விட்டார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கடுமையான வார்த்தைகளால் காஜலை அர்ச்சனை செய்து வருகிறார்கள். காஜல் நடிக்கும் படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பதாக சொல்கிறார்கள். காஜலை பிஜேபி கட்சியாகவே கருதுகிறார்கள்..
எங்கே போய் சொல்றது?












