
காண்டர்வர்சி கஸ்தூரி நள்ளிரவில் கிளப்பிய தடவல் சிக்கல் காலையில் நடிகை லதா வழியாக வெடித்தது. கஸ்தூரியின் பழைய படங்களை எல்லாம் எடுத்து விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சரி இனியும் பொறுப்பது நல்லதல்ல என்கிற முடிவுக்கு வந்த கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
“MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது?
அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?
இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது?
நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள்.
அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.
புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை.
தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன்.
காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம்.
இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.
உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு – நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை.
பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.
MGR அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல.
இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.” என்கிறார் கஸ்தூரி!
விட்ருங்கப்பா!












