கார்த்திக் சுப்புராஜ் தான் தற்போது தல ரசிகர்களின் வேட்டைக்காடு.! புகுந்து விளையாடுகிறார்கள்.
“எப்பவுமே தலைவர் (ரஜினி.) ,தல தோனி இவங்கதான் ‘லெஜன்ட்’என்று ஐ.பி.எல்.தொடர்பா கார்த்திக் சுப்புராஜ் பதிவு போட்டிருந்தார்.
அவ்வளவுதான் .கோடையின் மொத்த வெயிலும் சேர்ந்த மாதிரி அஜித் ரசிகர்கள் நெருப்பாயிட்டாங்க. இதில அப்பாவி தோனியும் சிக்கிட்டார்.
அந்தாளு என்னய்யா பாவம் பண்ணினார்!
“என்னதான் பேட்ட படம் ஓரளவுக்கு ஓடிருந்தாலும் 25 வருஷம் ரஜினி ஜெயிச்சு – தல கிட்ட தோத்தது இவன் படம் மூலமாச்சே .. அதான் இப்படி ஆயிட்டான் இவன் மனசுல 90 நாளா தேக்கி வச்சு அழுது எப்படி பழி வாங்குறதுன்னு தெரியாம ஐபில் சாக்கா வச்சு வாந்தி எடுத்துட்டான்” என்று ஒரு ரசிகர் திட்டிக் குமிக்க இன்னொருத்தர் படமே போட்டிருக்கார்.