எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “எனை சுடும் பனி” என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்…இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார்.
கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்…
கதா நாயகிகளாக உபாசனா, சுமா பூஜாரி நடிக்கிறார்கள்.
மற்றும்சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.