இது சினிமா.!
இரவில் கணவன் மனைவியிடையில் நடக்கும் அந்தரங்க விளையாட்டுகள் எல்லாம் அந்தந்த வசனங்களோடு படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். செல்போனிலேயே அவைகளை பார்க்கிறார்கள்.
இது கலாசார சீரழிவா,அல்லது காலமாற்றத்தின் எதிரொலியா என தெரியாமல் சிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில் பெரிய திரையில் அட்லீஸ்ட் லிப் லாக் இருந்தால்தான் தப்பிக்க முடியும் என்கிற நிலை.
தமிழ்ப்படங்களிலேயே சிலர் உதடுகளை மென்று ருசி கண்டு விட்டார்கள்.இப்படி இருக்க வடநாட்டில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியிடம் “ஆன்ஸ்கிரீன் முத்தம் யாருக்கு கொடுப்பீர்கள்? விக்கி கவுசலுக்கா? கார்த்திக் ஆர்யானுக்கா?”என கேட்க,
“விக்கி கவுசலுக்குத்தான்!”என ஜான்வி சொல்லியிருக்கிறார்.
உண்மையில் இரண்டு நடிகர்களுக்குமே பெண் ரசிகர்கள் அதிகம்.
தற்போது ஜான்வி இந்திய விமானப்படை பைலட் குஞ்சன் சாக்சேனாவைப் பற்றிய படத்தில் நடித்து வருகிறார்.
விக்கி மீது ஜான்விக்கு ‘கிரஷ்’இருப்பதாக சொல்கிறார்கள்.