
லைகாவின் மற்றொரு பிரமாண்ட தயாரிப்பு ‘தர்பார்.’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,சூப்பர் லேடி நயன்தாரா நடித்து வருகிற படம். ஏஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
சென்னையில் நடத்தினால் தொந்தரவாக இருக்கும் எனக் கருதி மும்பைக்கு ஷிப்ட் ஆனது படக்குழு.
அங்கே படப்பிடிப்புத் தொடங்கியதில் இருந்தே சின்னச்சின்ன சிக்கல்கள்.படப்பிடிப்பு படங்கள் அவுட் ஆகின.
இதனால் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு தொடர்கிறது.
கல்லூரியில் நடந்த படப்பிடிப்பைக் காண்பதற்காக கல்லூரி மாணவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புக் குழு அனுமதிக்கவில்லை.
இதனால் பாதுகாப்பாக கல்லூரியின் மாடிக்குச்சென்ற மாணவர்கள் அங்கிருந்து மலைப்பிஞ்சுகளை வீசி கலவரம் செய்தார்களாம்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் படப்பிடிப்புக் குழுவினர் பேச்சு நடத்தி வருவதாகச்சொல்கிறார்கள்.












