‘அகோரி’ படத்தின் முன்னோட்ட விழா.!
பிரபலங்கள் என்றால் பாக்யராஜ், அடுத்து கஸ்தூரி என இருவர் மட்டுமே.!மற்றவர்கள் எல்லாம் படத்துடன் தொடர்புடையவர்கள்.
எல்லோரும் படத்தைப்பற்றியும் நடிகர்களின் ஆற்றலைப் பற்றி பேசியபோது தளபதி விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ. தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது மட்டும் “பிரகாஷ்ராஜ் பேசியதை “வைத்து கிழித்து தொங்க விட்டு விட்டார்.
“தமிழ்மாணவர்களால் ஏனைய மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது என்று சொன்னதை தயவு செய்து சென்னைக்கு வந்து சொல்லட்டும்.அவர் கர்நாடக மாநிலத்தவர் என அவர் சொல்லிக்கொள்ளுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.ஆனால் தமிழர்களால் மற்ற மாநில மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகிறது என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்?” என்று பேசினார் .
இதை மையமாக வைத்து கருத்து கஸ்தூரி பேசுகையில் “எங்கு சென்றாலும் தமிழர்கள் கை ஓங்கி நிற்கிறது என்பதை சொன்னதாக எடுத்துக்கொள்வோமே .நடந்து முடிந்த தேர்தலில் கூட இந்தியாவின் தலைமையை முடிவு செய்வது தமிழ்நாடாகத்தான் இருக்கப்போகிறது”என்றார்.
அதிமுக அதிகமாக வெற்றி பெற்று வடக்கிற்கு உதவப் போகிறதா?
அல்லது,
திமுக வெற்றி பெற்று வடக்கில் வெற்றிபெறுகிற காங்கிரஸ் கட்சிக்கு உதவப்போகிறதா?
கஸ்தூரியின் கனவுதான் என்ன?திமுக.வா,அதிமுகவா?