
நார்த் இந்தியாவின் கலாச்சாரமே மேலை நாட்டின் மினுமினுப்புதான்! அங்க அரைகுறை ஆடைன்னா அதன் பிரதிபலிப்பை பாலிவுட் படங்களில் பார்க்கலாம். மேல்தட்டு வாசிகளிடம் காணலாம். அடிக்கடி பாலிவுட் நடிகைகள் பொங்கும் இளமையை காட்டுவது அந்நிய நாட்டுப் பாதிப்புத்தானே.!
மண்ணு திங்கிற உடம்ப மனிசன் தின்னா தப்பான்னு நம்ம ஊர்ல பேசிக்கிறதில்லையா..அதன் எதிரொலிதானே சார் அங்க உடம்ப காட்டுறது?
டாப்சி நம்ம தனுஷுடன் நடிச்ச நடிகை. கொஞ்சம் துணிச்சலான பொண்ணு.
“உங்களால மறக்க முடியாதது என்னன்னு” ஒரு நிருபர் கேட்டார். வழக்கமான கேள்விதான்.
ஆனா வந்த பதில் அத்தனை பேரையும் அசரவச்சிருச்சு!
“வருஷத்தில ஒன்னு ரெண்டு மறக்க முடியாததா அமைஞ்சிரும்.அப்படித்தான் மன்மர்ஜியான் படத்தின் ராப் அப் பார்ட்டி.
படம் முடிஞ்ச சந்தோசம். படம் வேற நல்லா வந்திருக்குன்னு பேச்சு. நானும் ஹீரோ விக்கி கவுசளும் நல்லா குடிச்சோம். மட்டையாகிற அளவுக்கு குடிச்சிருக்கோம். அப்படியே கார்டனில் படுத்தாச்சு.
இன்னிக்கி நைட் இங்கதான் தூக்கம்னு நான் எந்திரிக்கவே மாட்டேனுட்டேனாம். விக்கிதான் என்னை ஹோட்டல் ரூமுக்கு கொண்டுபோனார்னு விடிஞ்ச பிறகு சொன்னாங்க” என்று சொல்லிருக்காங்க டாப்சி….!












